» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரெப்போ விகிதத்தில் 5 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றம்: 6.25 சதவீதமாக குறைப்பு!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:06:56 PM (IST)
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக உள்ளது.

இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா வெளியிட்டுள்ளார். ரெப்போ ரேட் குறைவால், வங்கிகளில் வாங்கிய வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த நிதி ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். அதேபோல குறையும் போது, வட்டி விகிதமும் குறையும். நீண்ட காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூபாய் சின்னத்தை நீக்கியது பிரிவினைவாத அரசியல்: தமிழக அரசு மீது சீதாராமன் கடும் விமர்சனம்
வெள்ளி 14, மார்ச் 2025 10:43:27 AM (IST)

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)

மும்மொழி கொள்கையில் திமுக எம்.பி.க்கள் இரட்டை வேடம்: நிர்மலா சீதாரமன் ஆவேசம்
வியாழன் 13, மார்ச் 2025 11:12:57 AM (IST)

செளந்தர்யா திட்டமிட்ட கொலை: நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு - ஆட்சியரிடம் புகார்!
புதன் 12, மார்ச் 2025 3:56:56 PM (IST)

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
