» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

திங்கள் 13, பிப்ரவரி 2017 12:41:07 PM (IST)



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை(Oroville Dam) உடையும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

கனமழை காரணமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 13 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான அணை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணையின் நீர்மட்டம் வேறு உயர்ந்து கொண்டே போவது மக்களை மேலும் அஞ்ச வைத்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள சிலிக்கான் வேலி கலிபோர்னியாவில் தான் குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Guru Hospital

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory