» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை: சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை

செவ்வாய் 14, பிப்ரவரி 2017 4:28:37 PM (IST)

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை பாகிஸ்தானில் கொண்டாடக்கூடாது, தடை விதிக்கவேண்டும் என்று கோரி அப்துல் வாகீத் என்பவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "காதலர் தின கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது. ஆனால் இந்த தினம் குறித்து சமூக ஊடகங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன.

எனவே காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும், அதுபற்றி செய்திகள் வெளியிடுவதற்கும் தடை விதிக்கவேண்டும்” என்று கூறி இருந்தார். இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்து பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் உடனடியாக அறிவிக்கை வெளியிட்டது. சமூக ஊடகங்களும் காதலர் தினம் தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory