» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா: ரஷ்யாவின் சதியா?

புதன் 15, பிப்ரவரி 2017 12:49:33 PM (IST)

அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் ப்ளின் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் ப்ளின் , டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். டிரம்ப் ஆட்சிக்கு வரும் முன்னரே இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்தார். 

டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக மைக்கேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் மைக் பென்சிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory