» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 11:23:14 AM (IST)பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட‌‌‌‌ தற்கொலைப் படைத் தாக்குதலில்‌ சு‌மார் நூறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் சி‌ந்து மாகாணத்தில் உள்ள ஷெவான் ஷெ‌ரிப் என்ற இடத்தில் சுஃபி பிரிவினரின் வழிபா‌ட்டுத் தலமான லால் ஷாபாஸ் மசூதியில் ஏராளமானோர் திரண்டிருந்த போது, ‌தனது உடம்பில்‌ கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டுகளுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர், அங்கிருந்தவ‌ர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக முதலில் சில கையெறி கு‌ண்டுகளை ‌வீசினார்.

பி‌ன்‌னர் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டு‌ளை வெடிக்கச் செய்து தாக்கு‌தல் நடத்தினார். இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் உடல் சிதறி‌ உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர‌து நிலைமை கவலைக்கிடமாக இருப்ப‌தால் உ‌யிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் ‌என அஞ்சப்படுகிறது.‌ தாக்குதலை வன்‌மையாகக் கண்‌டித்துள்ள பிரதமர்‌ நவாஸ் ஷெரிப், ‌இதற்கு எதிராக மக்கள் ஒருங்கி‌ணைய வேண்டும் என‌க்‌ கேட்‌‌டுக் கொண்டுள்ளார்‌.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory