» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க பெண்கள் குறித்து க‌ருத்து : சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் அதிபர்

வெள்ளி 14, ஜூலை 2017 7:07:08 PM (IST)

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசினார்.அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த கூட்டத்தில் பேசிய அவர், பொருளாதார ரீதியாகவோ, சூழல் ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஆப்பிரிக்கக் கண்டம் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. மாறாக பூகோளரீதியிலேயே ஆப்பிரிக்கா பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு 7 முதல் 8 குழந்தைகள் இருக்கும் போது, அங்கு செலவுகள் அதிகரிக்கும். இதனால் அரசுகளால் நிலையாக எதையும் திட்டமிட்டு நிறைவேற்ற முடியாது என்று அவர் பேசியிருந்தார். 

மாக்ரோனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தை பெரு நிறுவனங்கள் கொள்ளையடித்ததாலேயே அங்கு பஞ்சம் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ள பலர்,அதைவிடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாட்டின் அதிபர் கருத்துத் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் பிரச்னைகளுக்கு குழந்தைகளைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று சிலர் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory