» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சனி 15, ஜூலை 2017 12:39:20 PM (IST)

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மனிதாபிமான அடிப்படையிலேயே மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாகவும் இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்படவுள்ள 42 படகுகளும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை சிறைபிடிக்கப்பட்டது ஆகும். 

இந்த படகுகள் அனைத்தும் வரும் 17ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவை நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory