» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயண்படுத்தியதால் புற்றுநோய் : பெண்ணுக்கு ரூ.2600 கோடி இழப்பீடு

புதன் 23, ஆகஸ்ட் 2017 4:41:25 PM (IST)ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு 2600 கோடி ரூபாய் நஷ்டயீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகப்பவுடர் உட்பட குழந்தைகளுக்கான பல உடல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்நிறுவனத்தின், பேபி பவுடர் உள்ளிட்ட தயாரிப்புகளில் கலந்துள்ள சில ரசாயனங்களால், புற்றுநோய் ஏற்படுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஈவா எக்கேவர்ரியா எனும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாக மரணபடுக்கையில் படுத்துள்ள ஈவா, தன்னுடைய சிறு வயது முதலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயனபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளத்தை அந்நிறுவம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 2600 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை  1,500க்கும் மேற்பட்ட வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மூடன்Aug 29, 2017 - 05:48:11 PM | Posted IP 122.1*****

உண்மையான மூடர்கள் அநியாயத்திற்கு சப்போர்ட் பண்ணுகிறவர்கள் தான்.

உண்மைAug 29, 2017 - 11:17:16 AM | Posted IP 59.99*****

அப்படியானால் நீ அந்நிய நாட்டிற்கு சென்றுவிட்டு மூடனே!

உண்மைAug 28, 2017 - 09:21:24 PM | Posted IP 122.1*****

மேலை நாடு என்பதால் தான் நீதி கிடைத்துள்ளது. இதுவே இந்தியாவாக இருந்தால் பணம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கியிருப்பார்கள். அது தானே இங்குள்ள நல்ல கலாச்சாரம்.

உண்மைAug 28, 2017 - 05:50:55 PM | Posted IP 59.99*****

ஒவ்வொரு மூடர் கூடாரத்து மூடனின் வாழ்வும் கேடில்தான் முடியும்!

ஒருவன்Aug 23, 2017 - 10:32:52 PM | Posted IP 59.89*****

உண்மை அவர்களுக்கு ... அது மட்டுமல்ல , கருப்பன் குசும்பன் ஒங்க தலைவன் கிழவன் மோடி வெளிநாட்டுக்கு டூர் க்கு போக ஆசைப்படுறான்...

nomanAug 23, 2017 - 06:26:58 PM | Posted IP 82.19*****

orunaalaum marathu, ingirukiravanukku adhuthavan mela kurai kandupidika than arivu velai seium, puthiya prayojanama ubayogi potta unmai.

உண்மைAug 23, 2017 - 05:20:33 PM | Posted IP 59.99*****

இனிமேலாவது தாய் நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடு போற்றப்படுமா? மேலை நாட்டு மோகம்/கலாச்சாரம் அழியுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory