» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் வடகொரியா உடன்பாடு?: டிரம்ப் சூசக தகவல்

வியாழன் 24, ஆகஸ்ட் 2017 9:00:35 AM (IST)

போர் பதற்றத்தை தணிப்பதற்காக அமெரிக்காவுடன் வடகொரியா உடன்பாடு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். 

அணு ஏவுகணை சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் வடகொரியாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் ஐப்பான் அருகே உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாமி தீவை தாக்க 4 ஏவுகணைகளை வடகொரியா நிறுத்தியது. இதற்கு பதிலடியாக தென்சீன கடல்பகுதிக்கு அமெரிக்க போர் கப்பல்கள் விரைந்தன. இதையடுத்து ஏவுகணைகளை வடகொரியா திரும்ப பெற்றது. அதே நேரம் மீண்டும் பல்வேறு ஏவுகணை சோதனைகளுக்கு வடகொரியா உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதனால் அமெரிக்கா கடும் ஆத்திரம் அடைந்தது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து வடகொரியாவை தாக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ந்து போன வடகொரியா தற்போது அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா பகுதியில் போனிக்ஸ் என்ற இடத்தில் நடந்த பேரணியில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அதில் அவர் வடகொரியா பிரச்னை குறித்தும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்தும் சூசகமாக தகவல் தெரிவித்தார். 

பேரணியில் அவர் பேசியதாவது: அணு ஆயுதங்களை உபயோகப்படுத்துவது தொடர்பாக வட கொரியாவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது அமெரிக்காவை மதிக்கத் தொடங்கி இருக்கிறார். எனவே, நானும் அவரை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன். வடகொரியாவில் உள்ள உண்மையை நான் மதிக்கிறேன். அங்கு நமக்கு சாதகமாக இல்லாத நிலை இருந்தாலும் கூட, சாதகமான தகவல்தான் கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர் பேசினார். வடகொரியாவுடன் என்ன உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. 

இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் கூறுகையில்,” வடகொரியாவில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐநா சமீபத்தில் விதித்த தடைக்கு பின் வடகொரியாவில் எந்தவித ஏவுகணை சோதனைக்கும் முயற்சி நடைபெறவில்லை. இதை முக்கிய முன்னேற்றமாக நான் கருதுகிறேன். அதை நான் வரவேற்கவும் செய்கிறேன். இது தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். நமது வழியிலே இனிவரும் காலங்களில் பேச்சுவார்த்தை நடைபெறலாம். இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது அனைத்தும் நமக்கு சாதகமாக முடியும்” என்றார்.


மக்கள் கருத்து

உண்மைAug 29, 2017 - 11:19:28 AM | Posted IP 59.99*****

என்னடா இது பேரிக்காய்க்கு வந்த சோதனை? இன்னுமாடா இந்த பேரிக்காவை உலகம் நம்புது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory