» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் இயற்கை பேரிடர், விபத்து, தொற்றுநோய் அபாயம்: சீனர்களுக்கு அரசு எச்சரிக்கை

சனி 26, ஆகஸ்ட் 2017 12:11:39 PM (IST)

இந்திய பயணத்தை தவிர்க்கும்படி, சீன மக்களை, அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம், அண்டை நாடான பூடான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, திபெத் ஆகிய பகுதிகள், டோக்லாம் எல்லையில் உள்ளன. டோக்லாமின் பெரும் பகுதி, பூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, அங்கு நம் வீரர்கள், எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், இரு மாதங்களுக்கு முன், டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது; இதை, நம் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது; இந்தியாவும், அங்கு, படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக, இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கு இடையே தொடர் பதற்றம் நிலவுவதால், கடந்த மாதம், 8ம் தேதி, இந்தியா செல்லும் சீன மக்களுக்கு, அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக, மக்களுக்கு, சீன அரசு, பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இந்தியா செல்லும் சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் இயற்கை பேரிடர், சாலை விபத்து, தொற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதால், இந்தியா செல்வதை, சீனர்கள் தவிர்க்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய பயணத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory