» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் கொரிய பத்திரிகையாளர்கள் 4பேருக்கு மரண தண்டனை: வடகொரியா உத்தரவு

வெள்ளி 1, செப்டம்பர் 2017 5:08:48 PM (IST)

அவதூறு செய்தி வெளியிட்டதாக தென் கொரிய பத்திரிகையாளர்கள் 4பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. 

தற்போது வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் வடகொரியா புத்தகம் வெளியிட்டது. தென்கொரியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 4 பேர் இந்த புத்தகத்துக்கு மதிப்புரை எழுதினார்கள். அதில் வடகொரியா குறித்து அவதூறாக எழுதி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே புத்தகத்துக்கு மதிப்புரை எழுதிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory