» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மியான்மர் மக்கள் இந்தியா வருவதற்கு கட்டணம் இல்லா விசா: பிரதமர் மோடி அறிவிப்பு

புதன் 6, செப்டம்பர் 2017 4:22:04 PM (IST)மியான்மர் நாட்டு மக்கள் இந்தியா வருவதற்கு இனி கட்டணமில்லாமல் விசா வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்றவரும், ஆளும்கட்சி தலைவரும் மியான்மர் அரசு ஆலோசகருமான ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பின்போது இந்தியா - மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, பிரதமர் மோடி மற்றும் ஆங் சான் சூகி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வரும் மியான்மர் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி கட்டணமில்லாமல் விசா வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்திய சிறைகளில் இருக்கும் மியான்மர் நாட்டை சேர்ந்த 40 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தாரை விரைவில் சந்திப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டார். அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் நடைபெற்றுவரும் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் வளர்ச்சிக்கும் இருநாடுகளின் கூட்டுறவுக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

முன்னதாக ஆங் சான் சூகியை சந்தித்த பிரதமர் மோடி, 1986-ம் ஆண்டு இந்தியாவின் சிம்லா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங் சான் சூகி படித்தபோது பட்டம் பெறுவதற்காக அவர் அப்போது சமர்ப்பித்திருந்த ஆய்வறிக்கையின் நகலை அவரிடம் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory