» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊழல் வழக்கில் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டு சிறை : கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 8, செப்டம்பர் 2017 11:30:55 AM (IST)ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பாக தற்போதைய அதிபர் சிறிசேனா நிர்வாகம் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.அந்த வகையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் செயலாளராக பதவி வகித்த லலித் வீரதுங்கா, தொலை தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனர் அனுஷா பால்பிட்டா ஆகிய 2 பேரும், அரசு பணத்தை 2015–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரித்தது.விசாரணை முடிவில் 2 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.52 மில்லியன் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பு, ராஜபக்சே காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளில் வந்துள்ள முதல் தீர்ப்பு ஆகும்.இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும் மேல்முறையீடு செய்வார்கள் என அவர்களது வக்கீல் காலிங்க இந்திரதிசா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory