» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் வடகொரியா தாங்காது: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

சனி 9, செப்டம்பர் 2017 8:30:54 AM (IST)

வடகொரியா கோபத்தை சீண்டுகிறது. அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு அது துக்க தினமாக மாறி விடும் என அதிபர் டொன்ல்டு டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

வடகொரியா கடந்த 3ம் தேதி அணு ஆயுத சோதனை மேற்கொண்டது. ஆறாவது அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக அமைந்ததால், வடகொரியா மகிழ்ச்சியாக உள்ளது. அதோடு, ஹைட்ரஜன் குண்டுகளை தாக்கி செல்லும் ஏவுகணையும் தயார் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. இதனால் தென்கொரியா, ஜப்பான் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என வடகொரியா சவால் விடுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது வடகொரியாவுக்கு துக்க தினமாக அமைந்து விடும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘‘ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனை செய்து வருகிறது. தேவையில்லாமல் அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது. பல முறை எச்சரித்தும், வடகொரியா தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. 

இதனை தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ராணுவ நடடிக்கையும் ஒன்று. அதனை அமெரிக்கா விரும்பவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா ராணுவ நடடிக்கை எடுத்தால், அது வடகொரியாவுக்கு துக்க தினமாக மாறி விடும்.’’ என்றார். வடகொரியாவுக்கு அமெரிக்கா அதிபர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் விரைவில் அடுத்த நடவடிக்கை இருக்கும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 05:47:31 PM | Posted IP 122.1*****

அவன் அணுகுண்டா போட்டு தாக்கிட்டு இருக்கான் இவன் என்னடானா சுடலை மாதிரி வாயாலே வடை சுடுறான்! என்னடா இது பேரிக்காய்க்கு வந்த சோதனை!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory