» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பனாமா கேட் ஊழல் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மீது 4 வழக்குகள் பதிவு

சனி 9, செப்டம்பர் 2017 11:50:26 AM (IST)

பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மீது 4 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் மகன் மற்றும் மகள் மீது ‘பனாமா கேட்’ ஊழல் புகார் கூறியது. அதையொட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நவாஸ்செரீப் பிரதமர் பதவியையும், எம்.பி. பதவியையும் இழந்தார். இதற்கிடையே இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது. 

அதற்காக நவாஸ் செரீப் குடும்பத்தினர் மீதான வழக்குகள் குறித்த ஆவணங்கள் 2 வாகனங்கள் மூலம் 16 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. இறுதியில் நவாஸ் செரீப், அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரணை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் இஷாக்தர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory