» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வரதட்சனை பணத்துக்கு ஆசைப்பட்டு 11பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது!

சனி 9, செப்டம்பர் 2017 5:14:51 PM (IST)



தாய்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் வரதட்சனை பணத்துக்கு ஆசைப்பட்டு 11பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஜிரியா பார்ன் என்ற 32 வயதான பெண் தாய்லாந்தின் நங் ஹாய் மாகணத்தை சேர்ந்தவர். தாய்லாந்து நாட்டு வழக்கப்படி ஆண் தான் பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்ய வேண்டும். இதனை ஜிரியா பார்ன் பணம் சம்பாதிக்கும் யுக்தியாக பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே திருமணமான ஜிரியா 11 ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வசதியாக வாழ்ந்து வந்துள்ளார். 

அதன் பின்னர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் திட்டமிட்டு பிரிந்துள்ளார். இதனையடுத்து ஜிரியா பார்னிடம் ஏமாந்த ஆண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ஜிரியா பார்னை அவரது சொந்த ஊரில் கைது செய்தனர். ஜிரியா பார்ன் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டுதான் ஆண்களை மயக்கியதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory