» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையை துண்டாட விரும்பவில்லை; தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்ல : விக்னேஸ்வரன்

திங்கள் 11, செப்டம்பர் 2017 9:14:02 AM (IST)

‘இலங்கை தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையே தேவை. இலங்கையை துண்டாட நாங்கள் விரும்பவில்லை’’ என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை தலைமையிடமாக கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அம்மாகாணத்தில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதிபர் சிறிசேனாவுடன் தமிழ் தேசிய கூட்டணி இணக்கமாக செயல்பட்ட போதிலும், விக்னேஸ்வரன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தென்பகுதியில் உள்ள கண்டியில் பிரபல புத்த துறவி மகாநாயகே தேராவை விக்னேஸ்வரன் சந்தித்தார். தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

பின்னர், விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மகாநாயகே தேரா உணர்ந்து கொண்டார். இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்கள், தங்கள் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள கூட்டாட்சி முறை வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், கூட்டாட்சி முறை வேண்டும் என்று கேட்கும்போதெல்லாம், நாங்கள் இலங்கையை துண்டாட முயற்சிப்பதாக பெரும்பான்மை சிங்களர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். ஆனால், நாங்கள் இலங்கையை துண்டாட விரும்பவில்லை. கூட்டாட்சி முறையை மட்டுமே கேட்கிறோம். தமிழர்கள் வேறு ஒரு தேசிய இனம் என்பதை சிங்களர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory