» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க ரூ.3.2 கோடி நிதி: அமெரிக்கா அறிவிப்பு
வெள்ளி 10, நவம்பர் 2017 12:40:44 PM (IST)
இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மத அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார்ரூ.3.2 கோடி பரிசளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மத அடிப்படையில் நிகழும் வன்முறைகளையும், பாரபட்ச நடவடிக்கைகளையும் குறைப்பதற்கான சிறந்த யோசனைகளை அளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்தப் பரிசுத் திட்டம் குறித்து விசாரித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை கூறுகையில், "இந்தியாவில் மத சகிப்புத் தன்மையை மேம்படுத்த அமெரிக்கா அறிவித்துள்ளதாகக் கூறப்படும் பரிசுத் திட்டம் குறித்து மேலும் விவரங்களைக் கோரியுள்ளோம். இந்தியாவில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றாலும், அது இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானினுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை : இந்தியாவிடம் வம்பிழுக்கும் சீனா!!
வெள்ளி 20, ஏப்ரல் 2018 5:15:12 PM (IST)

நான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாலியல் தொல்லை: பிரபல பாடகர் மீது நடிகை புகார்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 4:29:20 PM (IST)

லண்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
வெள்ளி 20, ஏப்ரல் 2018 11:14:41 AM (IST)

காதலுக்கு வயதில்லை..? 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்!
வியாழன் 19, ஏப்ரல் 2018 4:28:03 PM (IST)

இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை :ஐக்கியநாடுகள் சபை கண்டனம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:21:17 PM (IST)

பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம் : லண்டனில் பிரதமர் மோடி பேச்சு
வியாழன் 19, ஏப்ரல் 2018 9:00:26 AM (IST)
