» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் மெகா கூட்டணியில் இம்ரான்கான் இணைய வேண்டும்: பர்வேஷ் முஷாரப் அழைப்பு

சனி 11, நவம்பர் 2017 5:53:05 PM (IST)



பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் உருவாக்கி உள்ள மெகா கூட்டணியில், இம்ரான் கான் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷாரப் (வயது 74). கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்துள்ளார். இவர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசதுரோக வழக்கு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என்ற பெயரில் 23 அரசியல் கட்சிகளை கொண்ட மகா கூட்டணியை அவர் அமைத்துள்ளார். இதன் பொது செயலாளராக இக்பால் தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவர் துபாயில் வீடியோ கான்பரென்சிங் வழியே செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, முஹாஜீர் (புலம்பெயர்ந்தோர்) சமூகத்தினை குறிக்கும் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட வேண்டும் என கூறினார். இந்த புதிய அரசியல் கூட்டணியில் முத்தாஹிடா குவாமி இயக்கம் மற்றும் பாகிஸ்தான் சர்ஜமீன் கட்சி ஆகியவையும் இணைய வர வேண்டும். அனைத்து உறுப்பு கட்சிகளும் ஒரே பெயரில் போட்டியிடும் என்றும் கூறினார். அவர், பாகிஸ்தானை முன்னெடுத்து கொண்டு செல்லும் அமைப்புடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஐ இன்சாப் தலைவரான இம்ரான் கான் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory