» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழப்பு - 23 பேரைக் காணவில்லை

வியாழன் 30, நவம்பர் 2017 3:23:19 PM (IST)

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் பலியானதாகவும், 23 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இலங்கை அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி இலங்கையை தாக்கியது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 23 பேரைக் காணவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து 200 கி.மீ. நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 150 மிமீ மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் பெய்த மழையின்போது மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory