» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர்க் குற்றம்: சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்து மாண்ட போஸ்னியா மாஜி ராணுவ தளபதி ப்ரால்ஜக்!

வியாழன் 30, நவம்பர் 2017 3:59:22 PM (IST)போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போஸ்னியா நாட்டில் கடந்த 1992 - 95ம் ஆண்டுகளில் போர் நடந்தது. அப்போது குறிப்பிட்ட இன மக்களை படுகொலை செய்ததாக புகார் எழுந்தது. இதில் போஸ்னியா நாட்டின் ராணுவத் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ப்ரால்ஜக் உள்ளிட்ட 6 பேரும் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடந்தது. 

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ப்ரால்ஜக், நீதிபதி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே தனது உடையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்துக் குடித்தார். நீதிபதி முன்னிலையிலேயே விஷத்தை எடுத்த ப்ரால்ஜக், தான் குற்றமற்றவன் இல்லை என்றும், உங்களுடைய தீர்ப்பை நான் ஏற்க முடியாது என்று சொன்னபடியே விஷத்தைக் குடித்தார். உடனடியாக நீதிமன்றத்தை ஒத்திவைத்த நீதிபதி, ப்ரால்ஜக்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி போலீஸாருக்கு வலியுறுத்தினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மக்கள் கருத்து

niasDec 1, 2017 - 03:39:01 PM | Posted IP 171.4*****

திமிரு பிடித்தவர்கள் முடிவு இப்படி இருக்கிறம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory