» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏஞ்சலினா போல் மாற விரும்பி 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி: இளம்பெண் அகோரமாக மாறிய பரிதாபம்!!

சனி 2, டிசம்பர் 2017 12:30:41 PM (IST)ஏஞ்சலினா ஜோலி போன்று அழகாக மாற ஆசைப்பட்டு 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது இளம்பெண் அகோரமாக மாறியுள்ளார்.

ஈரானை சேர்ந்த இளம்பெண் சாகர் தாபர் (19). பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இருந்தாலும் அவருக்கு அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று தனது முக அழகை மாற்ற வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி (மாற்று அறுவை சிகிச்சை) செய்தார். இருந்தாலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.எனவே 50 தடவை முகமாற்று ஆபரேசன் செய்து கொண்டார். ஆனால் ஏஞ்சலினா ஜோலி போன்று முகம் மாறவில்லை. 

மாறாக அழகாக இருந்த முகம் அகோரமாக அவலட்சணமாக மாறி விட்டது. இருந்தாலும் தனது முக அழகை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பலவிதமான ‘போஸ்’களில் வெளியிட்டு திருப்திபட்டு வருகிறார். இவரை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர்கள் சாகர் தாபரின் முக அழகு குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவரது முகம் பிசாசு போன்று இருப்பதாகவும், பிணம் போன்று காட்சி அளிப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில் அழகாக இருந்த முகத்தை சிதைத்த அவருக்கு பிள்ளையார் பிடிக்க போய் அது குரங்கு போல் ஆன நிலைதான் ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

niasDec 2, 2017 - 12:58:16 PM | Posted IP 171.6*****

இறைவன் தந்த அழகான முகம், இறைவன்க்கு மாறுசெய்த இப்படி இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory