» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் செல்வதையும் தவிர்க்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுதுறை எச்சரிக்கை!

சனி 9, டிசம்பர் 2017 11:43:02 AM (IST)

பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்கள் நாடெங்கிலும் இருந்தும் அச்சுறுத்தல்கள், பிரிவினைவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 22-ம் தேதியும் இதேபோன்று அமெரிக்கா தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்து இருந்தது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது, அமெரிக்கத் குடிமக்கள் தெற்காசிய நாட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசியமற்ற  பயணங்களுக்கும் எதிரான எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுதுறை வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் தொடர்ச்சியான பயங்கரவாத வன்முறைகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்பு நிறுவன ஊழியர்கள் (என்ஜீஓ), மூத்த பழங்குடியினர்கள், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து பாகிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முழுவதும், வெளிநாடு மற்றும் தன்னிச்சையான பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதே போன்றதொரு எச்சரிக்கையை தங்கள் நாட்டு மக்களுக்கு நேற்று விடுத்திருந்தது.  அதில், பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என்று சீன தூதரகம் தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory