» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகள் தற்காலிமாக நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

வெள்ளி 5, ஜனவரி 2018 11:30:46 AM (IST)

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா தற்காலிமாக நிறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நிதியை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மேலும் பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை குற்றம்சாட்டின.

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சுமார் 33 பில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹெதர் நியூர்ட் கூறும் போது, "பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஹக்கானி குழு, தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்காதவரை, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த உள்ளது” இவ்வாறு தெரிவித்தார். 

எனினும், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவி தொகைகள் எவ்வளவு என்பதை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கவில்லை. எனினும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 255 மில்லியன் ராணுவ உதவியை விட தொகையை விட கூடுதலான தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory