» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஜினிக்கு சிறப்பு விருந்தளித்த மலேசிய பிரதமர்

சனி 6, ஜனவரி 2018 11:43:28 AM (IST)



நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினியை பிரதமர் நஜீப் தனது மாளிகைக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி நேற்று மலேசியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை அவரது மாளிகையில் சந்தித்தார். ரஜினிகாந்தின் ரசிகரான நஜீப் சென்ற முறை இந்தியா வந்தபோது, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு ரஜினி சிறப்பு விருந்தளித்தார். இதையடுத்து, மலேசியா சென்றுள்ள ரஜினியை நஜீப் தனது மாளிகைக்கு அழைத்துள்ளார். அங்கு அவரை வரவேற்ற பிரதமர் நஜீப்புடன் ரஜினிகாந்த் கலந்துரையாடினார். பின்னர், ரஜினிக்கு மலேசிய பிரதமர் சிறப்பு விருந்தளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory