» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா, ரஷ்யா, சீனா உடன் அமெரிக்கா இணைந்து செயல்படுகிறது: அதிபர் டிரம்ப் பேட்டி

வியாழன் 11, ஜனவரி 2018 5:27:55 PM (IST)

இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம். கெட்ட விஷயம் அல்ல. சக்தி வாய்ந்த ராணுவம், எண்ணெய் வளம் ஆற்றலை அமெரிக்கா பெற்றிருக்கிறது. ஆனால் முந்தய அரசு அத்தகைய ராணுவத்தை கொண்டிருக்கவில்லை. 

நாங்கள் உலகில் பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிற நாடுகளுடனான நட்புறவை நன்றாக பாதுகாத்து வருகிறோம் என நினைக்கிறேன். நான் இன்று காலை கூட தென்கொரிய அதிபர் மூன்-உடன் இரு நாட்டு உறவுக் குறித்து பேசினேன். நிறைய நன்மைகள் நடைபெற இருக்கின்றன. என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யா உடனான உறவை மேம்படுத்தி வருவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டனையும் டிரம்ப் விமர்சித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory