» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன : ஐக்கிய நாடுகள் சபை

புதன் 7, மார்ச் 2018 7:37:50 PM (IST)

இலங்கை நாட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று  ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

கட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லா மியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். 

தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

இதனிடையே இந்த மோதலில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை தாக்கினர். இதனால் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் வருத்தமளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory