» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்யக் கூடாது: பாகிஸ்தான் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 8, மார்ச் 2018 10:44:49 AM (IST)

2008-ல் மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்யக்கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. ஹபீஸ் நடத்தி வந்த மதரஸா, மருத்துவமனைகளுக்கு தடை விதித்து, அவற்றை மாகாண அரசுகளே தற்போது நிர்வகித்து வருகின்றன. இந் நிலையில் கடந்த ஜனவரியில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று ஜமாத் உத் தவா (ஜேயுடி) அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஹபீஸ் சயீதை கைது செய்யக்கூடாது என்று பாகிஸ்தான் அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது என்று ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறு அரசுகளுக்கு நீதிபதி அமீனுதீன் கான் உத்தரவிட்டார். - ஐஏஎன்எஸ்


மக்கள் கருத்து

ஒருவன்Mar 8, 2018 - 11:22:21 AM | Posted IP 59.96*****

அமெரிக்கா காரனை கூப்பிடுங்க , அந்த தீவிரவாதி பண்ணி மண்டைல குண்டு போட்டு சாவடிங்க .. இல்லையென்றால் இந்தியாவையும் அச்சுறுத்தி வருவான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory