» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் அஞ்சலி

வியாழன் 8, மார்ச் 2018 5:34:40 PM (IST)சிங்கப்பூரில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்குள்ள இந்திய தேசிய ராணுவ மையத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் அவர் இன்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். தனது சிங்கப்பூர் பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் லீ லூங் உடன் சந்தித்து பேச உள்ளார்.

சிங்கப்பூர் இந்திய கூட்டமைப்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனை அடுத்து அவர் மலேசியாவுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் நஜீப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், பள்ளி ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory