» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிவிட்டர் தளத்தில் உண்மையை விட வேகமாக பரவும் பாெய்கள் : ஆய்வில் தகவல்

வெள்ளி 9, மார்ச் 2018 6:54:47 PM (IST)

டிவிட்டரில் பல உண்மை செய்திகளை விட, பொய்யான செய்திகள் அதிக நபர்களை வேகமாக சென்றடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எம்ஐடி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்,ட்விட்டரில் பொய்யான தகவல்கள் உண்மையான செய்திகளை விட 70 சதவீதம் அதிகமான நபர்களால் ரீடிவீட் செய்யப்படுவதாகவும், ஒரு தவறான செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரத்து ஐநூறு பேரை சென்றடையும் என்றால், அதே உண்மையான செய்தி அதே ஆயிரத்து ஐநூறு பேரை சென்றடைய 6 மடங்கு அதிகமான நேரம் பிடிக்கிறது.

யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை தான் முதலில் ஷேர் செய்வதை பலரும் பெருமையாகக் கருதுகிறார்கள். அதே சமயம்,  உண்மையான செய்திகளை விட, தவறான செய்திகளுக்குத் தான் மக்கள் அதிகமாக ஆச்சரியம் அல்லது அதிருப்தியை தெரிவிக்கிறார்கள் என்றும் சொல்கிறது ஆய்வு.

எனவே, சமூக வலைத்தளத்தில் நமக்கு வரும் எந்த செய்தியையும் அதன் உண்மைத் தன்மை அறியாமல் அதை கண்மூடித்தனமாக ரீ-டிவீட்டோ அல்லது ஷேரோ செய்யாமல் தவிர்த்தால், வேகமாகப் பரவும் பொய்யான தகவல்களின் அந்த தொடர் சங்கிலி ஓரிடத்தில் அறுபட வாய்ப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory