» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேசத்துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

சனி 10, மார்ச் 2018 10:50:38 AM (IST)

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (74).  1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தார். அவர் தனது பதவிக் காலத்தில், அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். பல நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி அவர் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் தேசத்துரோக வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முஷரப்பின் சொத்துகள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.மேலும், முஷரப்பை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதுடன் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் அக்ரம் ஷேக், நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்தவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். முஷரப், தற்போது நாட்டில் இல்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், சிகிச்சை பெறப்போவதாக கூறி துபாய் சென்றார். அங்கிருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. அவர் அதே ஆண்டின் மே மாதம் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory