» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற காந்தி: அரிய புகைப்படம் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்!

சனி 10, மார்ச் 2018 4:16:13 PM (IST)

நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய புகைப்படம் ரூ. 28 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இங்கிலாந்து அரசுடன் வட்ட மேஜை மாநாடு மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த மாநாடு மூன்று கட்டங்களாக 1930 முதல் 1932 வரை லண்டனில் நடைபெற்றது. இதில், 1931ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மதன் மோகன் மால்வியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காந்தி, பவுண்டன் பேனாவினால் எம்.கே.காந்தி என கையெழுத்து போட்டிருந்தார். காந்தி தனது இடதுகைப் பழக்கத்திற்கு மாறிய சமயத்தில் கையெழுத்திட்ட புகைப்படம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இந்த அரிய புகைப்படமானது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆர்.ஆர்.மையத்தில் ஏலம் விடப்பட்டது. 41 ஆயிரம் டாலருக்கு இது ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 28 லட்சம் ஆகும்.

இவ்வளவு பணம் கொடுத்து இந்தப் புகைப்படத்தை ஏலத்தில் எடுத்தவர் யார் என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. இந்த ஏல நிகழ்ச்சியில் காந்தியின் புகைப்படம் மட்டுமின்றி, கார்ல் மார்க்ஸ் எழுதிய ரெவிலேஷன் கடிதங்களின் நகல்கள், எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அறிவுரைக் கடிதம் போன்றவையும் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory