» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராஜீவ் கொலையாளிகளை மன்னிப்பு,பிரபாகரனுக்காக வேதனை : காங்.,தலைவர் ராகுல்காந்தி

ஞாயிறு 11, மார்ச் 2018 12:02:27 PM (IST)

ராஜீவ் கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எனது தந்தை இறக்க போகிறார் என்பதும் எனது பாட்டி இறக்க போகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். 

அரசியலில் எதற்காகவாவது போரா டினால் மரணம் நிச்சயம் என்பது எனக்கு தெரியும்.எனக்கு 14 வயது இருக்கும்போது எனது பாட்டி இந்திரா படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளிகளுடன் நான் பேட்மிண்டன் விளையாடியுள்ளேன். எனது தந்தை மரணத்துக்கு பிறகு எனது வாழும் சூழலே மாறிவிட்டது. 24 மணி நேரமும் 15 பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.

எனது தந்தை ராஜீவ்காந்தி மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்தோம். பல ஆண்டுகளாக கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம்.ஆனால் தற்போது எப்படியோ கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். ஒரு விஷயம் தன் வாழ்க்கையில் நடைபெறும் போதுதான் அதை உணரமுடியும். 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை டிவியில் பார்த்தபோது இரு விஷயங்களை நினைத்தேன். குடும்பம் உள்ளது ஒன்று இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர், மற்றொன்று அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory