» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் : கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை இரங்கல்

புதன் 14, மார்ச் 2018 10:14:10 AM (IST)பிரபல அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி, பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) காலை காலமானார். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963-ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர். இங்கிலாந்த் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நரம்பு நோயல் பாதிக்கப்பட்ட இவர், குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு, பிரபஞ்ச கருங்குழி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..

சுந்தர் பிச்சை இரங்கல் 

உலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், இவ்வுலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory