» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிலி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டங்கள் குலுங்கின.. மக்கள் அதிர்ச்சி!!

புதன் 11, ஏப்ரல் 2018 11:28:52 AM (IST)

சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. 

இது குறித்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலி நாட்டின் தென்மேற்கே ஓவாலே என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கின. 

துறைமுக நகரமான கோகுயிம்போ பாதிக்கப்பட்டது .எனினும் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக வெளியேறி தஞ்சமடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory