» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 13, ஏப்ரல் 2018 12:35:27 PM (IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது. 1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை
சனி 23, பிப்ரவரி 2019 8:55:05 AM (IST)

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)
