» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழ் புத்தாண்டு: அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

சனி 14, ஏப்ரல் 2018 9:00:14 AM (IST)

தமிழ் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஜான் ஜே. சுல்லிவன் விடுத்து உள்ள அறிக்கையில், "உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டு உள்ளது. புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான நல்லுறவை வளர்க்கட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Tirunelveli Business Directory