» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கென்யா நாட்டில் அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பரிதாப பலி

வியாழன் 10, மே 2018 6:35:41 PM (IST)கென்யா நாட்டின் நகுரு கவுண்டி மாகாணத்தில் புதனன்று அணை உடைந்த விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பலியாகினார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நகுரு கவுண்டி மாகாணத்தில் படேல் என்ற அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டுவின் பாதுகாப்பு மதகுகள் புதனன்று மாலை உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாக பாய்ந்து வெளியேறியது.இந்த தண்ணீர் பாய்ச்சலில் அணையின் கரையோரம் இருந்த நுற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. 

வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.அங்கு மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை 27 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory