» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : காட்மண்டு முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம்
சனி 12, மே 2018 4:20:41 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் காட்மண்டு நகர் அருகிலுள்ள முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார். நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்பு அவர் முக்திநாத் கோவிலில் சாமி கும்பிட்டார். அவர் இறைவன் முன் அமர்ந்த நிலையில் பூக்களை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் வெளியே வந்த அவர் அந்நாட்டின் பாரம்பரியமிக்க டிரமை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று அவர் வழிபடுகிறார். பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை
சனி 23, பிப்ரவரி 2019 8:55:05 AM (IST)

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)
