» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேஸ்புக் தகவல் திருட்டு: ஐரோப்பியநாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

வியாழன் 17, மே 2018 4:23:28 PM (IST)

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். 

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.இதுதொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory