» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மலேசியாவில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி ரத்து: மகாதீர் முகமது அரசு அறிவிப்பு

வெள்ளி 18, மே 2018 11:01:45 AM (IST)

மலேசிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி ரத்து செய்யபடுகிறது.

மீண்டும் பழைய விற்பனை மற்றும் சேவை வரியை கொண்டு வர மலேசிய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் எப்போது இந்த வரிமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கவில்லை. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை ஈடு செய்ய முடியும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மலேசியாவில் சமீபத்தில் பொதுத்தேர்தல் முடிந்து மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலில் வெற்றிபெற்றால் சரக்கு மற்றும் சேவை வரியை நீக்குவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற இவர் ஜிஎஸ்டியை நீக்குவதாக அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி மலேசிய மக்களிடையே அதிருப்தியையும், வேலை இழப்புகளையும் உருவாக்கியது.

மலேசியாவின் வருமானத்தில், வருமான வரிக்கு (32%) பிறகு சரக்கு மற்றும் சேவை வரியின் பங்கு அதிகமாக ( 18%) இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்ட போது, சரக்கு மற்றும் சேவை வரியை சரியாக அமல்படுத்தாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இந்த முறையை நீக்க கோடிக்கணக்கான மக்கள் போராடிய நாட்களும் உண்டு. மோசமாக அமல்படுத்தபட்டதன் காரணமாகவே இந்த முறை நீக்கப்பட்டிருக்கிறது. தவிர தேர்தல் வாக்குறுதி என்பதாலும் நீக்கப்பட்டிருக்கிறது என்றார். ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்னும் முடிவு ஏற்கெனவே அறிவிகப்பட்டதுதான். அதில் இருந்து பின் வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என மலேசிய அரசின் ஆலோசகர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory