» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு

திங்கள் 21, மே 2018 12:10:12 PM (IST)

பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்து ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1897-ம் ஆண்டு, காஞ்சிமால், உஜாகர் மால் ராம் ராச்பால் ஆகியோரால் கட்டப்பட்டது. கிருஷ்ணர்  கோவிலில் காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என தினமும் 2 முறை பூஜை, வழிபாடுகள் நடந்து வருகின்றன. இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி இரட்டை நகரில் செயல்பட்டு வருகிற ஒரே இந்துக் கோவிலும் இதுதான்.

இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் ரூ.2 கோடியை அந்த அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இது குறித்து அறநிலைய சொத்துக்கள் வாரியத்தின் துணை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், "ராவல்பிண்டி கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண சட்டசபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து இந்தப் பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணத்தை கொண்டு அந்தக் கோவில் புதுப்பிக்கப்படும். பணிகள் முடிகிற வரையில் கருவறை மூடப்பட்டு இருக்கும். விரைவில் புதுப்பிப்பு பணிகள் தொடங்கி விடும். இந்தப் பணிகள் முடிந்தவுடன் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிற நிலை உருவாகும். இந்தக் கோவில் பணிகளுக்கு பஞ்சாப் மாகாண அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது அங்கு உள்ள இந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory