» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செவ்வாயில் 3 வித்தியாசமான பொருட்களை ரோவர் கண்டுபிடிப்பு.. நாசாவின் ஆராய்ச்சியில் திருப்பம்!

வெள்ளி 8, ஜூன் 2018 5:21:07 PM (IST)

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது அங்கு சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது. அங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்று பல காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை இதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் நாசா தற்போது மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இதன் பெயர் க்யூரியாசிட்டி. 

இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பதை போலவே மூன்று பொருட்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த மூன்று பொருட்களிலும் அதிக அளவில் மீத்தேன் இருந்துள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில்தான் மீத்தேன் வாயு இருக்கும் என்பதால், இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம், சிறிய செடியோ, புற்களோ இருந்திருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.

நாசாவின் ரோவரானது, செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை தோண்டி இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் தோண்டாமல், வெறும் 5 சென்டிமீட்டர்தான் தோண்டியுள்ளது. இதில்தான் இந்த மூன்று விதமான பொருட்கள் கிடைத்துள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது. 2020ல் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.இதில் சிறிய ரக கேமராக்கள் உள்ளது. இது ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பும். இது 2020ல் ஏவப்பட்டு 2021 செவ்வாயை அடையும். இதனுடன் இதை கட்டுப்படுத்துவதற்காக, ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது. ரோவரின் ஆராய்ச்சிகளை பெரிய அளவில் செய்ய இது உதவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory