» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை: தாய்லாந்து மீது சீனா விமர்சனம்!!
வியாழன் 12, ஜூலை 2018 5:02:50 PM (IST)
குகையில் சிக்கிய சிறுவர்கள் சிக்கிய விவகாரத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என சீனா விமர்சித்துள்ளது.
தாய்லாந்தில் கடந்த வியாழக்கிழமை புக்கெட் தீவுப் பகுதியில் படகில் 120 சீன சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இன்னும் பலர் மாயமாகியுள்ளனர் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவே தாய்லாந்து மீதான சீன அரசின் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது.
தாய்லாந்து அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் அந்நாட்டின் நெட்டிசன்களும், சீனா செய்தித்தாள்களும் தாய்லாந்து அரசை விமர்சித்து வருகின்றனர்.சீன நெட்டிசன்கள் பலர் "தாய்லாந்து கால்பந்து சிறூவர்கள் மீட்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சித்தான் ஆனால் நாங்கள் இனி தாய்லாந்து செல்ல மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
சீன அரசின் தேசிய பத்திரிகை கூறும்போது, ”இது ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை தாய்லாந்து வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது. தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் நாடுகளில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 10 லட்சம் சீன மக்கள் தாய்லாந்துக்கு வருடந்தோறும் சுற்றுலா செல்கின்றனர். இந்த நிலையில் புக்கெட் படகு விபத்து சீனா - தாய்லாந்து இரு நாடுகளில் நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)
