» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி

வியாழன் 19, ஜூலை 2018 4:32:52 PM (IST)

வடகொரியா அணு ஆயுதங்களை அழிப்பதற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங் கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக் கிடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகக் கூறப் படுகிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப்போல செயல்படுவதாக வடகொரியா கடந்த வாரம் குற்றம்சாட்டியது. மேலும் உயர்நிலை பேச்சு வார்த்தையின்போது அமெரிக்காவின் நிபந்தனைகள் பிரச்சினைக் குரியதாக உள்ளதாகவும் கூறி யிருந்தது.

இந்நிலையில் ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறும்போது, "வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. அணு  ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை. இந்த விவகாரத்தில் அவசரப்படத் தேவையில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கிடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory