» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை: இம்ரான்கான் திடீர் முடிவு!!

வெள்ளி 3, ஆகஸ்ட் 2018 5:36:07 PM (IST)

பதவியேற்பு விழாவுக்கு எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படாது என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்தது. 

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14-ம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான முயற்சிகளில் இம்ரானின் கட்சி தீவிரமாக உள்ளது. இதனிடையே, அந்தப் பதவியேற்பு விழாவில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் பிடிபி கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்பட்டது.  ஆனால், திடீர் திருப்பமாக, பதவியேற்பு விழாவுக்கு எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படாது என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்தது. 

அதேபோல், இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும்,  அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அரசியல் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவு, இம்ரான்கான் அழைப்பை ஏற்பதாக நேற்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிடிஐ கட்சியின் செய்தி தொடர்பாளர், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என யாருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory