» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூயார்க் பேச்சு போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி : சர்வதேச சாம்பியன் ஆக வாய்ப்பு

சனி 4, ஆகஸ்ட் 2018 12:31:23 PM (IST)

நியூயார்க் பேச்சு போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வரும் 25-ம் தேதி சிகாகோவில் நடைபெறும் போட்டியில் சர்வதேச பேச்சு சாம்பியன் ஆக வாய்ப்பு அவருக்கு வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் சிகாகோவில் உலகின் தலைசிறந்த பேச்சு சாம்பியனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. இதில் நியூயார்க் மாகாணத்தின் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான போட்டி அங்கு உள்ள லாங் தீவில் நடந்தது. இதில் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர், நஸ்ஸாவ், சப்பால்க் நகரங்களில் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழரான இவர் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் உள்ள வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். சென்னை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2 துறைகளில் எம்.எஸ். பட்டங்களையும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்று உள்ளார்.

சிகாகோவில் 23-ந் தேதி நடக்க உள்ள உலக பேச்சு சாம்பியன் அரை இறுதிப்போட்டியில் நியூயார்க் மாகாணத்தின் சார்பில் டாக்டர் ஹில் கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சார்பில் தமிழர் ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அரை இறுதிப்போட்டியில் உலகின் 110 சிறந்த பேச்சாளர்களுடன் இவர் மோத வேண்டியது இருக்கிறது. இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால், 25-ந் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory