» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் : இம்ரான் கானுக்கு சம்மன்!
சனி 4, ஆகஸ்ட் 2018 12:39:46 PM (IST)

அரசு ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கானுக்கு தேசியக் கணக்கியல் பணியகம் சம்மன் அனுப்பியுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி கைபர் பக்துன்குவா மாகாணத்தை ஆட்சி செய்துவருகிறது. இந்த மாகாணத்தின் அரசு ஹெலிகாப்டரை இம்ரான் கான் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், அதனால் 21 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இம்ரான் கானுக்கு அந்த நாட்டு லஞ்ச ஒழிப்பு அமைப்பான தேசிய கணக்கியல் பணியகம் சம்மன் அனுப்பியது.
அதில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக 74 மணி நேரம் பயன்படுத்தியுள்ளதாகவும் அதனால் அரசுக்கு 21 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி ஜூலை 19 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வேலை இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு ஆஜராவதாக இம்ரான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்ற தேசியக் கணக்கியல் பணியகம் ஆகஸ்ட் 7ஆம் தேதி இம்ரான் கான் நேரில் ஆஜராகுமாறு நேற்று (ஆகஸ்ட் 3) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 116 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சுயேச்சை மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளார் இம்ரான் கான். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிலையில் தற்போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம்? நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்!!
சனி 16, பிப்ரவரி 2019 5:41:48 PM (IST)

விதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 5:16:01 PM (IST)

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 12:32:49 PM (IST)

புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா
வெள்ளி 15, பிப்ரவரி 2019 3:58:48 PM (IST)

பாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
வெள்ளி 15, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை
வெள்ளி 15, பிப்ரவரி 2019 11:01:55 AM (IST)
