» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன்கள் இறக்குமதிக்கு தடை : பிரதமர் இம்ரான் கான் அதிரடி உத்தரவு

செவ்வாய் 11, செப்டம்பர் 2018 12:36:48 PM (IST)

பாகிஸ்தானில் ஓராண்டிற்கு ஸ்மார்ட் போன்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது அங்கு புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் இம்ரான் கான் பதவியேற்றார். இந்நிலையில் தற்போது இம்ரான் கான் சில அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். ராணுவத்தின் ஆதரவு இருப்பதால் இன்னும் நிறைய அதிரடிகளை அவர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையில்லாத சொகுசு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்ப்பேன் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது போல அரசு சம்பந்தமான பல ஆடம்பர பராமரியங்களை தடை செய்தார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளார். அதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்போன்களை மட்டுமே வாங்க முடியும். ஓராண்டிற்கு இந்த தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் சொகுசு கார், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை செய்துள்ளார். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் பல்வேறு அதிரடி நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் இதற்காக சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானை கடனாளியாக்க விரும்ப மாட்டேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளார். இதையடுத்தே தற்போது அங்கு ஸ்மார்ட்போன் இறக்குமதியை தடை செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory