» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அருண் ஜேட்லியுடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை - விஜய்மல்லையா

வியாழன் 13, செப்டம்பர் 2018 1:42:49 PM (IST)

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் விளக்கத்தை தொடர்ந்து, அவருடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 

இந்திய நாட்டில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், கடனை திருப்பி செலுத்துவது குறித்து பேசியதாகவும் மல்லையா நேற்று லண்டனில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன.ஆனால் மல்லையாவை சந்திக்க தாம் ஒருபோதும் நேரம் ஒதுக்கவில்லை என்று அருண்ஜேட்லி மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் அருண்ஜேட்லியை தாம் முறைப்படி சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் எதேச்சையாக சந்திக்க நேரிட்டது என்றும் விஜய் மல்லையா விளக்கமளித்துள்ளார். நாட்டிலிருந்து தப்பி ஓட மல்லையா அனுமதிக்கப்பட்டார் என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, தப்பி ஓடுவதற்கு யாரும் தனக்கு யோசனை கூறவில்லை என மல்லையா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory